Post

Share this post

கணவருடன் அரசி உடல் அடக்கம்!

பிரிட்டன் அரசி எலிசபெத்தின் உடல், கடந்த 2021 ஆம் ஆண்டில் மறைந்த அவரது கணவா் பிலிப்பின் உடலுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘பல்வேறு இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, அரசியின் உடல் அவரது கணவா் இளவரசா் பிலிப்பின் உடலுடன் மன்னா் 6 ஆம் ஜோர்ஜ் நினைவு தேவாலயத்தில் திங்கள்கிழமை அடக்கம் செய்யப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment