Post

Share this post

டி20 உலகக் கிண்ணம் – பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

டி20 உலகக் கிண்ண போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கிண்ண போட்டி அவுஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 திகதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன.
இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கிண்ண போட்டியின் பிரதான சுற்றுக்கு அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக பிரதான சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.
பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் அவுஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.
இந்நிலையில் டி20 உலகக் கிண்ண போட்டிக்கான பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல வீரர் ஃபகார் ஸமான் மாற்று வீரராக அணியில் இடம்பெற்றுள்ளார்.
பாபர் ஆஸம் (தலைவர்), முகமது ரிஸ்வான், இஃப்திகார் அஹமது, குஷ்தில் ஷா, ஹைதர் அலி, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், முகமது ஹஸ்நைன், நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப், ஷாஹீன் அஃப்ரிடி, ஆசிஃப் அலி, ஷான் மசூத், உஸ்மான் காதிர்.
மாற்று வீரர்கள்: ஃபகார் ஸமான், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி.

Leave a comment