Post

Share this post

பொன்னியின் செல்வன் புதிய போஸ்டர் இதோ!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா கடந்த 6 ஆம் திகதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டு டிரைலரை வெளியிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, ‘சோழா..சோழா’ ‘ராட்சஸ மாமனே’ ஆகிய பாடல்களின் லிரிக்கல் விடியோ வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில், இன்று அப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் என முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வருகிற செப்.30 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Recent Posts

Leave a comment