இலங்கையில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்!
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போது சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் தற்போது டெங்கு நோயும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாசிப்பதில் சிரமம், தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் டெங்கு நுளம்புகள் பரவாத வகையில் சுற்றுச் சூழலை வைத்திருக்குமாறும் சுகாதார தரப்பினரைப் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.