புதனின் பெயர்ச்சி – கஷ்டத்தை எதிர்நோக்க போகும் ராசிகள்!
கிரகங்களின் இளவரசன் என்றும் அழைக்கப்படும் புதன் கிரக பெயர்சி 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குழப்பத்தை உண்டாக்கப் போகிறது. இதனால், வேலையில் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து குழந்தைகளால் பிரச்சனைகள் வரலாம்.
புதன் பெயர்ச்சி பரிகாரங்கள்: புதன் பெயர்ச்சி காலத்தில், பாதிப்பிற்கு உள்ளாகும் ராசிகள், கவனத்துடன் செயல்பட்டு, புத பகவனானி திருப்தி படுத்த பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலம் பல வித நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். பாதிப்பிற்கு உள்ளாகக் கூடும் ராசிகளையும், அவர்களுக்கான பரிகாரங்களையும் தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களின் ஜாதகத்தில் புதனின் நிலை பலவீனமாக இருக்கும், இதனால் நிதி வாழ்க்கையில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வேலையில் உங்கள் பணிச்சுமை அதிகரிக்கலாம். அற்புதமான வாய்ப்புகள் கிடைத்தாலும், அவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படலாம். கண் எரிச்சல் மற்றும் பல்வலி பிரச்சனை ஏற்படலாம். தினமும் 19 முறை “ஓம் பௌமாயை நமஹ்” என்று ஜபிக்கவும்.
மிதுன ராசி
மிதுன ராசியினருக்கு புதன் பெயர்ச்சியினால், செலவுகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படலாம். கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். வியாபாரத்தில் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும். தங்கள் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் அல்லது சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயிறு தொடர்பான பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யும். தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதால் கெடு பலன்கள் குறையும்.
கடக ராசி
கடக ராசிகளுக்கு புதனின் சஞ்சாரத்தால், பணிச்சுமை அதிகமாக இருக்கலாம். செலவுகள் உங்கள் வருமானத்தை விட அதிகமாக இருக்கலாம், இது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். உங்கள் மீதான நம்பிக்கையை பிறர் இழக்க நேரிடும். நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்துவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். தனிப்பட்ட உறவுகளில் ஈகோ தொடர்பான பிரச்சனைகள் வரலாம். “ஓம் சோமாய நமஹ்” என்று தினமும் 21 முறை பாராயணம் செய்வதம் மூலம் நிவாரணம் கிடைக்கும்.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி காலத்தில் வருமானம் குறையும். வேலை நிமித்தமாக நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும், ஆனால் போதுமான பலன் கிடைக்காத பட்சத்தில் நீங்கள் அதிருப்தி அடையலாம். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க முடியாமல் போகலாம். பிள்ளைகளின் முன்னேற்றம் குறித்த கவலை அதிகரிக்கும். உங்கள் வணிக கூட்டாளருடனான உங்கள் உறவில் பதற்றம் இருக்கலாம். “ஓம் குரவே நமஹ” என்று தினமும் 21 முறை பாராயணம் செய்வது பலன் தரும்
விருச்சிக ராசி
விருச்சிக ராசியில் புதன் சஞ்சரிக்க உள்ள நிலையில்,வேலையில், தொழிலில், வியாபாரத்தில் சரிவைக் காணலாம். பணம் சம்பாதிப்பதில் சிக்கல்கள் வரலாம். நிதி நிலை பாதிக்கலாம். அலுவலக வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் நெருக்குதல்களை சந்திக்கலாம். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கலாம். நீங்கள் திடீரென்று தலைவலி மற்றும் தலைச்சுற்றலால் பாதிக்கப்படலாம். கெடு பலன்களில் இருந்து தபிக்க, பரிகாரத்திற்காக, தினமும் 11 முறை “ஓம் ஹனுமதே நம” என்று பாராயணம் செய்யவும்.