அர்ஜுனாவை வெல்லவைத்த சுமந்திரன் – கசியும் உண்மைகள்! (வீடியோ)
யாழ்பாணத்தின் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் உலகத் தமிழர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அத்தனை இன்னல்களினதும் பங்காளிகளாக அடையாளப்படுத்தப்பட்ட ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் 3 ஆசனங்களைக் கைப்பற்றி பெருவெற்றி ஈட்டியிருக்கின்றது.
களத்தினுள் இறங்கி வெறும் 3 மாதங்கள் மாத்திரமே அரசியல் செய்தவரும், தேர்தல் காலத்தில் அதிக சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்தவருமான வைத்தியர் அர்ச்சுனாவை வெல்லவைத்து அழகு பார்த்திருக்கின்றார்கள் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள்.
தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருந்த அத்தனை தரப்புக்களையும் ஒன்று தூக்கி எறிந்திருக்கின்றார்கள் அல்லது அவர்களது தலையில் குட்டியிருக்கின்றார்கள்.
யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் இந்த ஆணைக்குக் காரணம் என்ன என்று ஆராய்கின்றது இந்த வீடியோ!