அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றின் பேராபத்து அமெரிக்காவில் முடிவுக்கு வந்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு உலகில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு தோன்றியது. கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவியது. அதிலும் குறிப்பாக கரோனாவின் பேராபத்து அமெரிக்காவில் அதிக அளவு காணப்பட்டது.
கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.
இந்நிலையில் ஜோ பைடன், கொரோனா தொற்றின் பேராபத்து அமெரிக்காவில் முடிவுக்கு வந்து விட்டதாகவும், கொரோனா தொற்றின் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.