IPL வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்!
2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் டி20 தொடருக்கான ஏலம் தொடங்கியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.
ரிஷப் பந்த்தை ரூ.27 கோடிக்கு லக்னௌ அணி வாங்கியுள்ளது. முன்னதாக இன்றைய ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் (26.75 கோடி) பெற்றிருந்தார்.
ஆனால் அந்த சாதனை அடுத்த சில நிமிடங்களில் ரிஷப் பந்த் முறியடித்தார்.