Post

Share this post

பொன்னியின் செல்வன் படத்துக்கு அடி?

கலைப்புலி எஸ். தாணுவின் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன். இப்படத்தில் இந்துஜா, Elli AvrRam என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி யுவன் ஷங்கர் ராஜாவின் பாடலும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் நானே வருவேன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ. 25 கோடிக்கு அமேசான் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை ரூ. 18 கோடிக்கும் சன் டிவியும் வாங்கியுள்ளது.
இதன்முலம் ரூ. 43 கோடி வரை இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை விற்றுப்போயுள்ளது. ரூ. 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் ரிலீஸுக்கு முன்பே கிட்டத்தட்ட ரூ. 8 கோடி லாபமாக வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் என்று கூட சொல்லாமல்.
வருகிற 29ஆம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. அதற்க்கு அடுத்த நாளே பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகிறது.
தனுஷ் – செல்வராகவன் – யுவன் கூட்டணியில் உருவாகியுள்ள நானே வருவேன் படத்தினால் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் அடிவாகுமா என்று தற்போதே கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

Leave a comment