2025 இல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்!
2024 ஆம் ஆண்டு முடியப் போகிறது. இன்னும் சில நாட்களில் புத்தாண்டு தொடங்கும். ஜோதிட சாஸ்திரப்படி, புத்தாண்டின் தொடக்கத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை 12 ராசிகளையும் பாதிக்கிறது. இந்த புத்தாண்டில் குரு பகவானும் முக்கிய ஜோதிட மாற்றங்களை அடையவுள்ளார்.
2025 பிப்ரவரி இல் நடக்கவுள்ள குரு வக்ர நிவர்த்தி மற்றும் 2025 மே இல் நடக்கவுள்ள குரு பெயர்ச்சி ஆகியவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இதனால் ராஜயோகம் பெரும் ராசிக்காரர்கள் யார் யார் என நாம் இங்கு பார்ப்போம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு, குரு வக்ர நிவர்த்தியும் குரு பெயர்ச்சியும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு திடீரென்று பண வரவு அதிகமாகும். குறிப்பாக, எழுத்து, ஊடகம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு இந்த நேரம் அருமையாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். நல்ல முதலீட்டு வாய்ப்புகள் அமையும். உங்கள் கடின உழைப்புக்கு வெகுமதி கிடைக்கும். குடும்பத்திலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்
ரிஷப ராசி
குரு வக்ர நிவர்த்தி ரிஷப ராசிக்காரர்களுக்கு சுப யோகத்தை ஏற்படுத்தும். குரு பகவானின் அருளால் நம்பிக்கை அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பல துறைகளில் வெற்றி பெறலாம். புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் உங்களின் அங்கீகாரம் உயரும். மரியாதை அதிகரிக்கும். திருமணமானவர்களின் உறவுகள் வலுவாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தி சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய வழிகளில் பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் அமையும். பணியில் பாராட்டும் மரியாதையும் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இந்த காலகட்டத்தில், முதலீடும் நன்மை பயக்கும். பங்குச்சந்தை அல்லது லாட்டரியில் லாபம் கிடைக்கும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதமான பலன்களை அள்ளித்தரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண வரவு அதிகமாகும். இந்த நேரத்தில், உங்கள் முழுமையற்ற வேலைகள் அனைத்தையும் எளிதாக நடத்தி முடிக்கலாம்.