OOSAI RADIO

Post

Share this post

பாராளுமன்றம் பற்றிய புதிய அறிவிப்பு

சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில், பாராளுமன்றில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில், பாராளுமன்றம் டிசம்பர் 03 – 06 ஆம் திகதி வரை கூடும் என பாராளுமன்ற செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதியினால் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கக் கொள்கை அறிக்கை மீதான பிரேரணை, முற்பகல் 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

புதன்கிழமை, டிசம்பர் 04 ஆம் திகதி முற்பகல் 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை, இந்த விவாதம் தொடரும் என்றும், பிரேரணை மீதான விவாதம் மாலை 5 மணிக்கு நடைபெறும் என்பதை கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான கணக்கு வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தின் மீதான விவாதத்தை, டிசம்பர் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் முற்பகல் 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அறிக்கையின்படி, அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான விவாத நேரத்தை ஒதுக்குதல், குழுக்களில் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளின் அமைப்பு, தெரிவுக்குழுவை நிறுவுதல் மற்றும் பொருத்தமான வேட்புமனுக்களை சமர்ப்பித்தல், உருவாக்கம் குறித்தும், கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் இதர குழுக்களுக்கான குழு, துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் செயற்பாடு மற்றும் பத்தாவது பாராளுமன்றத்திற்குள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை நிறுவுவதற்கான கோரிக்கை தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Courtesy: Sivaa Mayuri

Leave a comment

Type and hit enter