பூராடத்தில் சூரியன் பெயர்ச்சி – அதிர்ஷ்டம் இவர்களுக்கு!
ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சிகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. கிரகங்களின் ராசி பெயர்ச்சிகள் மட்டுமல்லாது நடசத்திர பெயர்ச்சிகள், வக்ர பெயர்ச்சிகள், வக்ர நிவர்த்த், கிரகங்களின் உதயம், அஸ்தமனம் என அனைத்தும், எல்லோரின் வாழ்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பூராட நட்சத்திரத்தில் சூரியன் பெயர்ச்சியாவதினால், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் பெரிதும் பலனடைவார்கள். சூரியனின் நட்சத்திர மாற்றம் காரணமாக, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் 2025 புத்தாண்டில் அதிர்ஷ்ட பலன் கிடைக்கும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
மேஷம்
சூரியன் பெயர்ச்சி காரணமாக, மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும். வெற்றியை நோக்கி அடி எடுத்து வைப்பார்கள். கடின உழைப்பில் முழுமையாக கவனம் செலுத்துங்கள். வெற்றியின் மூலம் சமூகத்தில் உங்களுக்கான ஒரு புதிய அடையாளம் உருவாகும். ஆன்மீகம் தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள்.
கன்னி
சூரியன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடந்த சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார பலம் உண்டாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.தொழில், வியாபாரம் தொடர்பான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களின் கடின உழைப்பின் பலன் விரைவில் கிடைக்கும்.
மீனம்
சூரியன் பெயர்ச்சி மீன ராசியினருக்கு நன்மைகளை அள்ளித் தரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். செல்வம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தாண்டுக்கு முன் மனதிற்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களைக் கேட்கலாம். வருமான உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம்.