OOSAI RADIO

Post

Share this post

தினமும் இட்லி சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

காலை உணவாக நம்மில் பெரும்பாலான நபர்கள் எடுத்துக் கொள்ளும் இட்லியை சாப்பிடுவதால் என்னென்ன நன்மை என்பதை தெரிந்து கொள்வோம்.

புதிதாக பிறக்கும் நாளில் மனிதர்கள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு காலை உணவு மிகவும் முக்கியமாகும்.

ஆனால் இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் காலை உணவிற்கு பெரும்பாலான நபர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

காலை உணவை தவிர்ப்பது உடல்நலத்தை அவ்வளவு பாதிக்காது என்று நினைத்திருந்தால், அது மிகப்பெரிய தவறாகும்.

ஆம் காலை உணவை தவிர்ப்பதால் நீரிழிவு உட்பட பல நோய்களுக்கு காரணமாக அமைகின்றது. மேலும் அன்றைய நாளில் நாம் செய்ய வேண்டிய வேலைகளும் தடைபடும்.

இட்லி காலை உணவிற்கு மிகவும் சிறந்ததாகும். பூரி, சப்பாத்தி, தோசை என்று காலை உணவை விரும்புவர்கள் இட்லியை எடுத்துக் கொண்டால் நல்லதொரு மாற்றத்தினை காணலாம்.

இட்லி சாப்பிட்டால் என்ன நன்மை?

ஆவியில் வேக வைப்பதால் இட்லியில் கலோரிகள் குறைவு. இட்லியில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் செரிமானத்தை எளிதாக்குவதுடன், பசியையும் குறைக்கின்றது. இட்லி உடலில் இரும்புச்சத்து அளவை அதிகரிக்க உதவுகின்றது. இட்லியில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதாகும். இட்லி சாப்பிடுவதால் எடை இழப்புக்கு உதவியாக இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Leave a comment

Type and hit enter