OOSAI RADIO

Post

Share this post

சுனாமி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்!

சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மற்றும் ஆரையம்பதி பகுதியில் கடல்நீர் உள்வாங்கப்பட்டதாகவும் கிணற்றுநீர் வற்றியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சுனாமி ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டு அப்பகுதியிலிருந்து வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை தொடர்புகொண்டு கேட்டபோது அவர் இதனை மறுத்ததோடு மக்கள் இயல்பாக அப்பகுதியில் வசிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இது முற்றிலும் போலியான தகவல் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.எஸ்.சியாத் தெரிவித்துள்ளார்.

மேலும், சுனாமி அனர்த்தம் ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக உடனடியாக அறிவிக்கப்படும் என்பதனை மிகவும் பொறுப்புடன் அறியத்தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter