OOSAI RADIO

Post

Share this post

செவ்வாய் வக்ர பெயர்ச்சி – கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

செவ்வாய் பகவான் தற்போது கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 7 ஆம் திகதி செவ்வாய் வக்ரநிலை எனும் பின்னோக்கி நகரக்கூடிய பயணம் செய்ய தொடங்க உள்ளார்.

இதன் காரணமாக எந்தெந்த ராசிக்கார்கள் எந்தெந்த விஷயங்களுக்கு கவனமாக இருக்க வேண்டும் என நாம் இங்கு பார்ப்போம்.

மேஷ ராசி

மேஷ ராசி அதிபதியான செவ்வாய் பகவானின் வக்ர பெயர்ச்சி காரணமாக உங்களுக்கு பலவிதத்தில் சிக்கல் தரக்கூடியதாக இருக்கும். செவ்வாய் சுகஸ்தானத்தில் இந்த நகர்வை மேற்கொள்வதால் உங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும், நீங்கள் செய்யக்கூடிய தொழில், வேலை தொடர்பான விஷயத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் குடும்ப உறுப்பினர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை.

ரிஷப ராசி

ரிஷப ராசி சிறந்தவர்களுக்கு செவ்வாய் பகவான் மூன்றாம் வீட்டில் வக்ர நிலையை அடைய உள்ளார். இந்த காலத்தில் உங்களின் தைரியம், மன உறுதி குறையும். குடும்பத்தில் வெளியில் உள்ள உறவிலிருந்து சிக்கல் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும். பயணங்கள் எதிர்பார்த்த பலனைத் தராது. வாழ்க்கைத் துணையுடன் உறவில் விரிசல் ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் கவனம் தேவை. பரிகாரமாக தினமும் முருக வழிபாடு செய்வது அவசியம்.

மிதுன ராசி

மிதுன ராசிக்கு தன ஸ்தானத்தில் செவ்வாய் பிற்போக்கு நிலை நடக்க உள்ளது. இதன் காரணமாக உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகளும், வீண் பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. பயணங்கள் மூலம் அலைச்சலும், எதிர்பார்த்த லாபம் கிடைக்காத சூழலும் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உங்கள் செயலில் ஆர்வம் இல்லாத சூழல் இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

சிம்ம ராசி

சிம்ம ராசி சேர்ந்தவர்களுக்கு விரய ஸ்தானமான 12ஆம் வீட்டில் செவ்வாய் வக்ர நிலை அடைவதால் தேவையற்ற மன சங்கடங்களும், செலவுகளும் ஏற்படும். உடல் பலம் இல்லாதது போல் உணர்கிறீர்கள். உங்களின் செயலில் திட்டமிடல் அவசியம். தொழில் ரீதியாக பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. தேவையற்ற நஷ்டம் ஏற்படும். சிலருக்கு மன அழுத்தமும், கால், மூட்டு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்ப ராசி

கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாயின் அமைப்பு காரணமாக உங்களுக்கு கடின உழைப்பு ஏற்ப வெற்றி கிடைக்கும். இருப்பினும் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி அதிகமாகவும், உங்கள் கூட்டாளிகள் உங்களை விட்டு விலக நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

Leave a comment

Type and hit enter