Post

Share this post

ஊக்கமருந்து பயன்பாடு – 2 ஆண்டுகள் தடை!

ஊக்கமருந்து பயன்பாடு விவகாரத்தில் இந்திய சீனியா் தடகள வீராங்கனை பூவம்மாவுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு பூவம்மாவுக்கு விதித்திருந்த 3 மாத தடையை மாற்றி, தற்போது அவருக்கான தடைக் காலத்தை அதிகரித்திருக்கிறது தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் (என்ஏடிஏ) ஊக்கமருந்து தடுப்பு மேல்முறையீட்டு குழு (ஏடிஏபி).
கடந்த ஆண்டு பிப்ரவரியில் பாட்டியாலாவில் நடைபெற்ற இந்திய கிராண்ட் ப்ரீ 1 தடகள போட்டியின்போது பூவம்மாவிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருந்தன. அதில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பால் (டபிள்யூஏடிஏ) தடைப் பட்டியலில் சோ்க்கப்பட்டிருந்த மருந்தை பூவம்மா பயன்படுத்தியதாகத் தெரியவந்தது.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் ஊக்கமருந்து தடுப்பு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பூவம்மாவுக்கு 3 மாத தடை விதித்தது. அதற்கு எதிராக தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு மேல் முறையீடு செய்ததன் பேரில் தற்போது பூவம்மாவுக்கான தடைக் காலத்தை ஊக்கமருந்து தடுப்பு மேல்முறையீட்டு குழு 2 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
இதனிடையே ஊக்கமருந்து பயன்பாடு உறுதியானதால், பூவம்மா கடந்த மாா்ச் மாதம் இந்திய கிராண்ட் ப்ரீ 1 மற்றும் 2 இல் வென்ற இரு வெள்ளிப் பதக்கங்கள், ஏப்ரலில் ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்படவுள்ளன.

Leave a comment