Post

Share this post

ரோஹித் சர்மா புதிய சாதனை!

இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
உலகக் கிண்ணத்துக்கு முன்பு இந்திய அணி ஆஸி., தென்னாப்பிரிக்க அணியுடன் டி20 போட்டிகள் விளையாட உள்ளது. இந்திய அணியுடன் ஆஸி. அணியிடன் நேற்று (செப்.23) இரண்டாவது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக நியூசிலாந்து வீரர் மார்டி கப்டில் 172 சிக்ஸர்களுடன் சர்வதேச டி20 போட்டிகளில் முதலிடத்தில் இருந்தார். ஆஸி. எதிரான 2வது டி20 போட்டியில் 20 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுத்த போட்டியில் 4 சிக்ஸர்கள் விலாசினார்.
தற்போது ரோஹித் சர்மா 176 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். ரோஹித் இந்த வருடத்தில் மட்டும் 26 சிக்ஸர்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியல்:
ரோஹித் சர்மா – 176
மார்டின் கப்டில் -172
கிறிஸ் கெயில் – 124
இயான் மோர்கன்- 120
ஆரோன் பின்ச் – 119

Leave a comment