Post

Share this post

காதலனுக்கு முத்தமிட்டு சம்மதம் சொன்ன பிரபலம்! (விடியோ)

திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்த தனது காதலருக்குச் சம்மதம் கூறியுள்ளார் பிரபல நடிகர் ஆமிர் கானின் மகள் ஐரா கான்.
1986-ல் நடிகை ரீனா தத்தாவைத் திருமணம் செய்தார் ஆமிர் கான். இவர்களுக்கு ஜுனைத் என்கிற மகனும் ஐரா என்கிற மகளும் உள்ளார்கள். 2002-ல் விவாகரத்து பெற்று ஆமீர் கானும் ரீனா தத்தாவும் பிரிந்தார்கள். லகான் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரண் ராவை 2005-ல் திருமணம் செய்தார் ஆமிர் கான். 2011-ல் ஆசாத் ராவ் கான் என்கிற மகன் பிறந்தார். 15 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு பிரிவதாக ஆமிர் கானும் கிரண் ராவும் கடந்த வருடம் அறிவித்தார்கள்.
இந்நிலையில் ஆமிர் கானின் மகள் ஐரா கான், தனது காதலரைத் திருமணம் செய்வதற்கு சம்மதம் அளித்துள்ளார். இதுதொடர்பான விடியோவை இன்ஸ்டகிராமில் அவர் பகிர்ந்துள்ளார்.
நீண்ட நாளாக ஃபிட்னஸ் பயிற்சியாளர் நுபூர் சிகாரைக் காதலித்து வருகிறார் ஐரா கான். தான் கலந்துகொண்ட சைக்கிள் பந்தய நிகழ்ச்சியில் ஐராவிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார் நுபூர். இதுதொடர்பான விடியோவில் முதலில் நுபூரும் ஐராவும் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். அத்துடன் என்னைத் திருமணம் செய்துகொள்வாயா என ஐராவிடம் நுபூர் கேட்கிறார்.
மைக்கில் அனைவர் முன்பும், நிச்சயமாக என உரக்கப் பதிலளிக்கிறார் ஐரா. இதற்கு அருகில் இருந்த நண்பர்கள் பலரும் உற்சாகமாக கரகோஷம் செய்கிறார்கள். பிறகு ஐராவுக்கு மோதிரம் அணிவிக்கிறார் நுபூர். இருவரும் முத்தமிட்டு இந்த நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். இந்த விடியோவை ஐரா கான் இன்ஸ்டகிராமில் பகிர்ந்ததற்கு பல திரைப் பிரபலங்களும் காதல் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Ira Khan (@khan.ira)

Leave a comment