OOSAI RADIO

Post

Share this post

விரைவில் அறிமுகமாகவுள்ள X Mail

கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் ஒன்றை விரைவில் எலான் மஸ்க் அறிமுகம் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

டெஸ்லா, ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டு டுவிட்டர் சமூக வலைத் தளத்தை வாங்கி பின்னர் அதன் பெயரை எக்ஸ் என்று மாற்றம் செய்தார்.

இந்நிலையில், எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் ஒன்று விரைவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ள பதிவுகளின் அடிப்படையில் தற்போது இந்த கருத்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

எலான் மஸ்க்கின் எக்ஸ் மெயில் பயன்பாட்டிற்கு வந்தால் ஜிமெயிலுக்கு கடும் போட்டி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter