Post

Share this post

அனிருத் தாத்தா காலமானார்!

இயக்குநரும் வானொளி விளம்பரங்கள் மூலம் புகழ்பெற்றவருமான எஸ்.வி. ரமணன் இன்று காலமானார்.
1930களிலும் 40களிலும் தமிழ்ப் படங்களை இயக்கி புகழ்பெற்ற கே. சுப்ரமணியத்தின் மகனான எஸ்.வி. ரமணன், நாடகக் கலைஞராகத் தனது கலை வாழ்க்கையைத் தொடங்கினார். தூர்தர்ஷனில் சில நாடகங்களையும் ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார். அகில இந்திய வானொலியில் விளம்பரங்களுக்குக் குரல் கொடுத்ததன் மூலம் கூடுதல் கவனம் பெற்றார். ரத்னா ஃபேன் ஹவுஸ் விளம்பரத்தில் ஒலிக்கும் இவருடைய குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.
1983 இல் ஒய். ஜி. மகேந்திரன், சுஹாசினி நடித்த உறவுகள் மாறலாம் என்கிற படத்தை இயக்கினார். மேலும் அதற்குக் கதையெழுதி இசையமைத்தார். அந்தப் படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகிய பிரபலங்கள் கெளரவ வேடங்களில் நடித்தார்கள். எஸ். வி. ரமணனுக்கு லட்சுமி, சரஸ்வதி என இரு மகள்கள் உள்ளார்கள். லட்சுமியின் மகன் அனிருத் பிரபல இசையமைப்பாளராக உள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார் எஸ்.வி. ரமணன். அவருடைய மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Recent Posts

Leave a comment