Post

Share this post

ஐசிசி டி20 தரவரிசையின் புதிய பட்டியல்…

ஐசிசி டி20 தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 2 – 1 என இந்தியா கைப்பற்றிய நிலையில், இந்திய அணி 7 புள்ளிகள் முன்னிலையுடன் முதலிடத்தில் உள்ளது.
3 ஆட்டங்கள் தொடரில் 1 – 0 என முதல் ஆட்டத்தை இழந்தாலும், அடுத்த 2 ஆட்டங்களை வென்று 2 – 1 என தொடரைக் கைப்பற்றியது இந்தியா. தற்போது இந்தியாவுக்கு 268 புள்ளிகள் கிடைத்துள்ளன.
இங்கிலாந்து 261 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 258 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் நான்காவது இடத்திலும், நியூஸி. 252 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளன.
நடப்பு உலக சாம்பியன் 6 ஆவது இடத்திலேயே உள்ளது. இங்கிலாந்து – பாகிஸ்தான் டி20 தொடா் தற்போது 2 – 2 என சமநிலையில் உள்ளது. அதன் முடிவைப் பொருத்து இங்கிலாந்தின் தரவரிசை மாறுபடும்.
அடுத்து தென்னாப்பிரிக்காவுடன் 3 ஆட்டங்கள் டி20 தொடரில் இந்தியா ஆடுகிறது.

Recent Posts

Leave a comment