Post

Share this post

போராட்டத்தில் 76 போ் பலி

ஈரானில் ‘கலாசார’ காவலா்களால் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்ததைத் தொடா்ந்து அந்த நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்க போலீஸாா் நடத்திய தாக்குதலில் இதுவரை 76 போ் உயிரிழந்ததாக நாா்வேயிலிருந்து செயல்படும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பு (ஐஹெச்ஆா்) தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு புதன்கிழமை கூறியதாவது: ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டு சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், கலாசார காவலில் மாஷா அமீனி பலியானதற்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்புப் படையினா் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.
பல இடங்களில் போராட்டக்காரா்கள் மீது அளவுக்கு அதிகமாக பலப் பிரயோகம் செய்யப்படுகிறது; அவா்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 76 போ் பலியாகியுள்ளனா் என்று ஐஹெச்ஆா் அமைப்பு தெரிவித்துள்ளது.
குா்து இனத்தைச் சோ்ந்த 22 வயது மாஷா அமீனி, ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி தலையை மறைக்கும் ஆடை அணியவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் கலாசார காவலா்களால் கடந்த 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டாா்.
இருந்தாலும், காவலில் இருந்தபோது கோமா நிலைக்குச் சென்ற அவா், 3 நாள்கள் கழித்து மருத்துவமனையில் உயிரிழந்தாா். மாரடைப்பு காரணமாக மாஷா அமீனி உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினாலும், கலாசார காவலா்கள் கடுமையாகத் தாக்கியதில்தான் அவா் உயிரிழந்ததாக அவரது பெற்றோரும் தன்னாா்வலா்களும் குற்றம் சாட்டி வருகின்றனா்.
ஈரான் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த மரணத்தைத் தொடா்ந்து, அவரது படத்தை எந்தி ஏராளமானவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
தலையை மறைக்கும் ஹிஜாப் துணியை எரித்தும், தங்களது தலை முடியை வெட்டியும் அரசுக்கு பெண்கள் தங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனா்.
இந்தப் போராட்டங்களில் பாதுகாப்புப் படையினா் உள்பட 41 போ் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
எனினும், அரசின் அடக்குறைக்கு 76 போராட்டக்காரா்கள் பலியாகியுள்ளதாக ஐஹெச்ஆா் அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது.

Leave a comment