OOSAI RADIO

Post

Share this post

இந்த ராசியினர் பேரதிஷ்டத்தை கொடுப்பார்களாம்!

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரை பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்கக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்கள் திருமணத்துக்கு பின்னர் கணவருக்கு பாரிய முன்னெற்றத்தையும் அதிர்ஷ்ட பலன்களையும் கொடுப்பார்களாம்.

இவர்களை திருமணம் செய்யும் ஆண்கள் நிதி நிலையில் அசுர வளர்ச்சியடைவார்களாம். அப்படி கணவருக்கு செல்வத்தை கொட்டிக்கொடுக்கும் மகா லட்சுமி உருவில் பிறப்பெடுத்த பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியான சுக்கிரனின் ஆதிக்த்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்கள் வாழ்வில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.

இவர்கள் இருக்கும் இடத்தில் செல்வ செழிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கும். இவர்களை திருமணம் செய்துக்கொள்ளும் ஆண்களுக்கு இவர்கள் பேரதிஷ்டத்தை கொடுப்பார்கள்.

இந்த ராசி பெண்களுக்கு இயல்பாகவே நிதி முகாமைத்துவ அறிவு அதிகமாக இருக்கும். தங்களிடம் இருக்கும் பணத்தை எவ்வாறு இரட்டிப்பாக்கலாம் என்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசி பெண்ணை திருமணம் செய்யும் ஆண் வாழ்நாளில் பணத்துக்கு கஷ்டப்பட வேண்டிய தேவை ஏற்படாது.

கடகம்

கடக ராசியின் அதிபதியாக சந்திரன் இருப்பதால், இந்த ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் வசீகரமான தோற்றமும் மென்மையான மற்றும் அன்பான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அந்த ராசி பெண்கள் தங்களின் துணையின் மகிழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். இவர்களை திருமணம் செய்யும் ஆண்களுக்கு நிதி ரீதியில் விரைவான முன்னேற்றம் உண்டாகும்.

இந்த ராசி பெண்களக்கு புகுந்த வீட்டை செல்வத்தால் நிரப்பும் அதிஷ்டம் பிறப்பிலேயே இருக்கும். இவர்கள் கணவனுக்கு மகா லட்சுமியின் ஆசியை பெற்றுக்கொடுப்பார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு சூரியன் அதிபதியாக இருப்பதால், இந்த ராசி பெண்களுக்கு தலைமைத்துவ பண்புகள் மிகவும் அதிகமாக இருக்கும்.

இயல்பாகவே தன்னம்பிக்கை அதிகம் கொண்ட இவர்கள், சுயமரியாதையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

இந்த ராசி பெண்கள் திருமணத்துக்கு பின்னர் கணவருக்கு அதிக மகிழ்சி மற்றும் அமைதி நிறைந்த வாழ்க்கையை பரிசளிக்கின்றார்கள். அவர்களின் கணவர் இவர்களை அடைந்த பின்னர் நிதி நிலையில் பாரியளவில் முன்னேற்றம் அடைவார்.

Leave a comment

Type and hit enter