OOSAI RADIO

Post

Share this post

நடிகை பற்றி லீக்கான புகைப்படம்!

நடிகை பிரணிதாவின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கடந்த 2011ஆம் ஆண்டு அருள்நிதிக்கு ஜோடியாக “உதயன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ்.

கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக வலம் பிரணிதா சுபாஷ் தமிழில் நடிகர் கார்த்திக், சூர்யாவுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடைசியாக அதர்வா முரளிக்கு ஜோடியாக ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார்.

பிரணிதா சுபாஷ் கோலிவுட்டில் வெகு சில படங்களில் நடித்திருந்தாலும், சீக்கிரமாகவே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய, தன்னுடைய நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான நித்தின் ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் பெரிதாக சினிமா பக்கம் தலைக்காட்டாத பிரணிதா சுபாஷ் சமூக வளைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில், திருமண புகைப்படங்கள் தொடக்கம் கர்ப்பமாக இருப்பது முதல் குழந்தை பிறந்தது என அனைத்தையும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரது இரண்டாவது குழந்தை பிறப்பை அறிவித்திருந்தார்.

தற்போது கணவர், மகள், மகன் என குடும்பமாக இருக்கும் படங்களை பகிர்ந்துள்ளார். படங்களை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் குவித்து வருகிறார்கள்.

Leave a comment

Type and hit enter