OOSAI RADIO

Post

Share this post

நடிகர் அஜித்தின் கார் விபத்து!

துபாயில் கார் ஓட்ட பந்தயத்திற்கான பயிற்சியில் போது நடிகர் அஜித்தின் கார் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சமீபத்தில் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை நடிகர் அஜித் குமார் உருவாக்கியுள்ளார், தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த நிலையில் கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்காக நேற்றையதினம் அஜித் துபாய் சென்றுள்ளார்.

அங்கு தனது அணியினருடன் அஜித் இருக்கும் காணொளி ஒன்று வைரலானது.

இந்நிலையில் இன்றையதினம் (07) கார் ரேஸிற்கான பயிற்சியில் அஜித் ஈடுபட்ட போது அவர் செலுத்திய கார் விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் நடிகர் அஜித் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அஜித் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a comment

Type and hit enter