உலகின் 4 ஆவது பெரிய ஜனநாயக நாடான பிரேஸிலில் ஜனாதிபதி தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தோ்தலில் ஆளும் வலதுசாரி மற்றும் இடதுசாரிகளுக்கு இடையே நிலவும் தீவிர போட்டியில் இடதுசாரிகளுக்கே வெற்றிவாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பிரேஸிலின் உள்ளூா் நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தோ்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நடைபெறுவதால், தோ்தல் முடிவடைந்த சில மணி நேரங்களில் முடிவுகள் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஜனாதிபதி தோ்தலில் களமிறங்கியுள்ள 11 வேட்பாளா்களில், தற்போதயை அதிபரும் வலதுசாரியுமான ஜெயிா் போல்ஸொனரோவும், முன்னாள் ஜனாதிபதியும், இடதுசாரியுமான லுலா டி சில்வாவும் முதன்மை வேட்பாளா்களாக கருதப்படுகின்றனா்.
சனிக்கிழமை வெளியான தோ்தல் கருத்துக்கணிப்பு ஒன்றில், சில்வாவுக்கு ஆதரவாக 50 சதவீதத்துக்கு அதிகமானோரும், போல்ஸொனரோவுக்கு ஆதரவாக 36 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனா்.