ஐபிஎல் தொடரில் மாற்றம்!

18 அவது ஐபிஎல் தொடருக்கான அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த தொடர் முன்னர் அறிவிக்கப்பட்ட திகதியை விட ஒரு வார காலம் தாமதமாக ஆரம்பிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதி கொல்கத்தாவில் ஆரம்பமாகும் குறித்த போட்டித் தொடர் மே மாதம் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த தொடரின் இறுதிப் போட்டியும் கொல்கத்தாவிலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய ஆட்டங்களுக்கான இடங்கள் மற்றும் மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.