OOSAI RADIO

Post

Share this post

நான் வாங்குறேன் – லாஸ்லியா கொடுத்த பதிலடி!

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் லாஸ்லியா மரியநேசன். இந்நிகழ்ச்சியில் கவினுடன் காதலில் இருந்து பின் பிரிந்த லாஸ்லியாவுக்கு அவரது தந்தையின் மரணம் அதிர்ச்சியை கொடுத்தது.

அதிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா, ஒருசில படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் ஜம்ப் கட்ஸ் ஹரி பாஸ்கருடன் Mr.Housekeeping என்ற படத்தில் நடித்துள்ளார் லாஸ்லியா. இப்படத்தின் டிரைலர் ஜனவரி 20 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஆடையணிவது குறித்து வரும் கமெண்ட் பற்றி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் சோசியல் மீடியாவில் ஒரு பொண்ணு போடும் ஆடையை வைத்து அந்த பொண்ணு இப்படித்தான் என்று ஜட்ஜ் செய்வது தப்பு.

அது அவர்களுடைய சொந்த விருப்பம். நான் காசுக்கொடுத்து வாங்குகிறேன், எனக்கு பிடித்திருக்கிறது. என் ஃபேமிலி பார்க்கிறார்கள், பிரண்ட்ஸ் பார்க்கிறார்கள். அதை நான் உடுத்திக்கொள்ளலாம் இல்ல, அதனால் அந்த விஷயத்தை நான் எப்போது சப்போர்ட் பண்ணமாட்டேன் என்று லாஸ்லியா கூறியிருக்கிறார்.

Leave a comment

Type and hit enter