Post

Share this post

திருநங்கையாக மாறிய நடிகை!

பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென் ‘தாலி’ – பஜாவுங்கி நஹி, பஜ்வாங்கி’ படத்தில் திருநங்கை ஆர்வலர் ஸ்ரீகௌரி சாவந்த் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு சுஷ்மிதா சென் கூறியதாவது:
‘தாலி’, நான் கைதட்டமாட்டேன், ஆனால் மற்றவர்களை அவ்வாறு செய்ய வைப்பேன். இந்த அழகான நபரை சித்தரித்து அவரது கதையை உலகிற்கு கொண்டு வந்ததை விட வேறு எதுவும் என்னைப் பெருமையுடனும் நன்றியுடனும் இருக்கச் செய்யவில்லை. வாழ்வதற்கும், கண்ணியத்துடன் வாழ்வதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு.
நான் உங்களை நேசிக்கிறேன். இது போராட்டம், சகிப்புத்தன்மை மற்றும் அடங்காத சக்தியின் கதையை விவரிக்கும்” என்றார் சுஷ்மிதா.
கணேஷாக பிறந்து புனேயில் வளர்ந்த ஸ்ரீகௌரி சாவந்த் மும்பையைச் சேர்ந்த திருநங்கை ஆர்வலர். 2013-ல் தாக்கல் செய்யப்பட்ட தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் மனுதாரர்களில் இவரும் ஒருவர். 2014-ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்தது.
இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் ரவி ஜாதவ் இயக்கியுள்ள நிலையில், அர்ஜுன் சிங் பரன், கார்ட்க் டி நிஷாந்தர் மற்றும் நாடியாட்வாலா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Leave a comment