OOSAI RADIO

Post

Share this post

மிக மோசமான இடத்தைப் பிடித்துள்ள இலங்கை ரூபா

இலங்கை ரூபாய் மிகவும் மோசமாகச் செயற்படும் வளர்ந்து வரும் சந்தை நாணயமாகக் காணப்பட்டதாக ப்ளூம்பெர்க் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

2024 ஆம் ஆண்டில் முதலிடத்தைப் பெற்ற பின்னர், ஜனவரி மாதம் நான்காவது வாரத்தின் இறுதியில் இந்த நிலைமை பதிவாகியுள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதியின் இறுதியில் ரூபாய் 1.72% எதிர்மறை நிலையை பதிவு செய்துள்ளது.

மேலும் அடுத்த மோசமான செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக அர்ஜென்டினாவின் பெசோ மற்றும் துருக்கியின் லிரா ஆகியவை முறையே 1.46% மற்றும் 0.89% எதிர்மறையான புள்ளி நிலைகளை பதிவு செய்துள்ளன.

ரஷ்ய ரூபிள் 2025 இல் 16.07% புள்ளிகளுடன் இதுவரை வளர்ந்து வரும் சந்தை நாணயமாக இருந்தது, கொலம்பிய பெசோ 5.45% புள்ளியுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கை ரூபாய் 2024 ஆம் ஆண்டு முடிவடைந்ததுடன், ரூபாயின் பெறுமதி 10.85% புள்ளிகளுடன் வளர்ந்து வரும் சந்தை நாணயமாக காணப்பட்டது.

இலங்கை 2024 ஆம் ஆண்டில் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு பணியாளர்களின் பணம் அனுப்பி வைப்புக்கள் மூலம் 9.6 பில்லியன் டாலர்களை மொத்தமாக ஈட்டியிருந்தது.

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதனால் ரூபாவின் பெறுமதியில் பாதக மாற்றங்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter