Whatsapp இல் அறிமுகமாகும் புதிய அம்சம்!

இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று ஒரே செயலியில் பல கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தை வட்ஸப்பில் (Whatsapp) மெட்டா விரைவில் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையிடமாக கொண்டு பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக ‘மெட்டா’ இயங்குகின்றது.
இந்த நிறுவனமானது பேஸ்புக், வட்ஸப், மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற பிரபல சமூக வலைத்தளங்களை இது நிர்வகித்து வருகின்றது.
அந்தவகையில், மெட்டா நிறுவனம் நிறுவனம் பல புதுப்பிப்புக்களை வட்ஸப்பில் செய்து வருகின்றது.
அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று ஒரே செயலியில் பல கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தை வட்ஸப்பில் மெட்டா விரைவில் கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஒருகணக்கை ஸ்விட்ச் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்ஸப்பில் ஏற்கனவே ஸ்விட்ச் கணக்கு என்கிற ஒரு முறை உள்ள நிலையில் அதில் நுழைவதன் மூலம் மற்றொரு வட்ஸப் கணக்குகள் நுழைய முடியும்.
ஆனால் இது இன்ஸ்டாவில் வருவது போன்று ஒரே வட்ஸப் கணக்கின் மூலம் பல கணக்குகளை பயன்படுத்தும் அம்சமாக விரைவில் வர உள்ளமை குறிப்பிடத்தக்கது.