OOSAI RADIO

Post

Share this post

அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது – வாழ்த்து சொன்ன ரஜினி!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி படம் வெளிவரவுள்ளது.

இதை தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் துபாயில் நடைபெற்று கார் ரேஸில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்தார். இதனை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

கடந்த வாரம் பத்ம விருதுகள் பெரும் நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அஜித் கலை பிரிவில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. பத்ம பூஷன் விருது பெரும் ஐந்தாவது தமிழ் நடிகர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது என அறிவித்தபின், அரசியல் பிரபலங்களும், திரை நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை அஜித்திற்கு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பத்ம பூஷன் விருது பெரும் அஜித்திற்கு தனது வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

Leave a comment

Type and hit enter