விஜய்யை பிரிந்து வாழும் சங்கீதாவின் சொத்து இவ்வளவா?

நடிகர் விஜய்யின் மனைவியான சங்கீதாவின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தான் நடிகர் விஜய்.
இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களில் பல விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தாலும் தற்போது டாப் ஹீரோவாக வலம் வருகிறார்.
“பூவே உனக்காக” என்ற படத்தின் மூலம் விஜய்யின் நல்ல நேரம் ஆரம்பமானது. அத்துடன் இந்த திரைப்படத்தின் மூலம் தான் பெண்கள், குழந்தைகள் விஜய்யின் ரசிகர்களாக மாறினார்கள்.
இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதுமே லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய் படம் என்றாலே கட்டாயம் 200 கோடி வசூலை கடக்கும் என்ற நிலையே வந்துவிட்டது. இதனால் “வசூல் கிங்” எனவும் அழைப்படுகிறார்.
இதற்கிடையில் நடிகர் விஜய் லண்டனை சேர்ந்த சங்கீதா என்ற திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் விஜய் – சங்கீதா இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக இருந்து வருகின்றது.
அந்த வகையில், லண்டனில் செட்டிலாகி சங்கீதா விஜய்யிடம், 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.
அதே சமயம், கார் பிரியரான விஜய்யிடம், ஆடி, பிஎம்டபிள்யூ. லெக்சஸ் உள்பட பல ஆடம்பரமான சொகுசு கார்களை வைத்திருக்கிறார். சென்னை நீலாங்கரையில் ஆடம்பரமான சொகுசு வீடு, திருவள்ளூர், திருப்போரூர், திருமழிசை, வண்டலூர் ஆகிய இடங்களில் ஏராளமான சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அரசியலில் நுழைந்த விஜய்யின் அடுத்த திரைப்படத்திற்கு “ஜன நாயகன்” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.