OOSAI RADIO

Post

Share this post

உலகில் மிகவும் விலை உயர்ந்த உப்பு இதுதான்!

உலகில் மிகவும் விலை உயர்ந்த உப்பு குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

உணவிற்குச் சுவை கூட்ட உப்பு பயன்படுகிறது.வெள்ளை உப்பு நமது உணவில் அயோடினை சேர்ப்பதற்கான ஆதாரமாக உள்ளது. அயோடின் உடலுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்து கொண்டுள்ளது. உப்பு மூன்று வகை உள்ளது. அயோடின் கலந்த உப்பு, கல் உப்பு, இந்துப்புமாகும்.

நாம் அன்றாட சமையல் அறையில் பயன்படுத்தும் உப்பின் விலை பெரும்பாலும் அனைத்தும் நாடுகளிலும் விலை மிக குறைவாகத் தான் இருக்கும். இதற்குக் காரணம் உலகின் பல நாடுகளில் மிக எளிதாகச் சமையல் உப்பு தயார் செய்யப்படுவதால் இதனுடைய விலை குறைவானதாக இருக்கிறது.

ஆனால் உலகில் மிகவும் விலை உயர்ந்த உப்பு ஒன்று உள்ளது. அது ஒரு கிலோ 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.கொரியாவைச் சேர்ந்தது மூங்கில் உப்பு என்கிற கொரியன் சால்ட் . இது தான் உலகத்திலேயே அதிக விலை கொண்ட உப்பாக உள்ளது.

இந்த உப்பு மற்ற உப்புகளை விட எளிமையாக அவ்வளவு எளிதில் தயாரிக்க முடியாது. முதலில் சாதாரண உப்பு மூங்கில் கட்டைகளுக்குள் வைக்கப்பட்டு மஞ்சள் நிற களிமண்ணால் மூடப்படுகிறது.அதன் பிறகு சூடேற்றப்படுகிறது. தொடர்ந்து 9 முறை இது போன்று செய்யப்படுகிறது.

பின்னர் நிறம் மாற்றப்படுகிறது. ஒரு சாதாரண உப்பை மூங்கில் உப்பாக மாற்றுவதற்குக் குறைந்தது 50 நாட்கள் ஆகும். ஒரு கிலோ கொரியா மூங்கில் உப்பு ரூ. 30,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.இதனை கொரிய மக்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்துகின்றனர்.

Leave a comment

Type and hit enter