OOSAI RADIO

Post

Share this post

இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் ரூபா!

இலங்கையில் கழிவுப் போக்குவரத்தை ஒழுங்கமைப்பதற்கு, ஜப்பானிய அரசினால் 300 மில்லியன் யென் நன்கொடை வழங்க, அந்த அரசினால் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு அமைய இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய ஜப்பான் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்குறித்த நிதிக்கொடையை பெறுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவ்வாறு நாட்டிற்கு வழங்கப்படும் நிதி, மேல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ ஆற்றலை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை 28 Garbage Compactors கொள்வனவு செய்வதற்காகவும் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த திட்டம் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேற்பார்வையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேற்குறித்த கருத்திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்துக்கு 14, கிழக்கு மாகாணத்துக்கு 8, வடக்கு மாகாணத்துக்கு 6 என்றவாறு Garbage Compactors பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

Leave a comment

Type and hit enter