OOSAI RADIO

Post

Share this post

அதிகாலை மற்றும் நள்ளிரவில் சினிமா பார்க்க தடை!

‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு திரையிடலின் போது ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் அல்லு அர்ஜுனைக் காண கூட்டம் முந்தியடித்ததால், நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

அவரது குழந்தை மூளைச்சாவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக தற்போது சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், தெலங்கானாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரவு 11 மணிக்கு பிறகும் பகல் 11 மணிக்கு முன்பும் திரையரங்குகளில் படம் பார்க்க அந்த மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகாலை மற்றும் நள்ளிரவில் சினிமா பார்க்க வெளியே செல்வது உடல்நலனை பாதிக்கும் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது உண்மைதான் என நீதிபதி கூறினார்.

Leave a comment

Type and hit enter