வேலையில்லா பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அரச சேவையில் தற்போதுள்ள 30,000 வெற்றிடங்களை நிரப்புவதற்கான அவசர தேவை குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கவனம் செலுத்தியுள்ளார்.
அநுராதபுரம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற அநுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஏற்பாடுகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் மேலும் கலந்துரையாடப்பட்டது.
அரச சேவையில் ஒருங்கிணைந்த மனித வள முகாமைத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தி, நேர்முகத் தேர்வு உள்ளிட்ட தொழில்நுட்ப நடைமுறைகளால் ஆட்சேர்ப்பில் தாமதம் ஏற்படுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கலந்துரையாடலின் போது மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக மக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவையை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என தெரிவித்தார்.