சைவ முதலை மரணம்!

கும்லா அருகே ஸ்ரீ அனந்தபுரம் கோயிலில் இருந்த சைவ முதலை உயிரிழந்தது.
கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் கும்லா அருகே ஸ்ரீ அனந்தபுரம் கோயில் உள்ளது. தண்ணீரால் சுழப்பட்ட இந்த கோயிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பாபியா என்ற முதலை வசித்து வந்தது. அதன் வயது 75.
இறைவனுக்கு படையலிடும் உணவை மட்டும் உண்டுவந்த இந்த சைவ முதலை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. தகவல் அறிந்த பக்தர்கள் கோயில் முன்பு வைக்கப்ட்டிருக்கும் முதலைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.