OOSAI RADIO

Post

Share this post

Deepseek ஐ பயன்படுத்த தடை

அமெரிக்க பாராளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் டீப்சீக் ஏ.ஐ. மாதிரியை பதிவிறக்கும் செய்ய வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனா கடந்த சில தினங்களுக்கு முன் டீப்சீக் எனும் ஏ.ஐ. மாதிரியை வெளியிட்டது.

இது அமெரிக்காவின் சாட்ஜிபிடி, ஜெமினி, மெட்டா ஏ.ஐ மாதிரிகளுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.

டீப்சீக் மாதிரி இலவசமாக கிடைக்கும் என்பதால் பெரும்பாலானோர் தங்களது பதிவிறக்கம் செய்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களுடைய கணினி மற்றும் தொலைபேசிகளில் பதிவிறக்கும் செய்ய வேண்டாம் என நாடாளுமன்ற தலைமை நிர்வாக அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

AI தொழில்நுட்பத்தின் விரைவான பரிணாமம் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு மற்றும் நிர்வாக சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

டீப்சீக் தற்போது மதிப்பாய்வின் கீழ் உள்ளதால் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கவில்லை.

சாட்பாட்டை பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் மென்பொருளை வழங்கவும், சாதனங்களை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அச்சுறுத்தும் நபர்களை மேற்கோள் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இத்தாலி நாடு முழுவதும் டீப்சிக் ஏ.ஐ. மாதிரிக்கு தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter