OOSAI RADIO

Post

Share this post

20 வருடங்களுக்கு முன் கொலை – 11 பேருக்கு மரண தண்டனை!

பதுளை – ஊவா பரணகம பகுதியில் 20 வருடங்களுக்கு முன்பு ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பிரதிவாதிகளுக்கு எதிராக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த 11 பேரும் பதுளை மேல் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு மே மாதம் 23 வயதுடைய இளைஞரொருவர் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் 13 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

சம்பவத்தில் முதல் பிரதிவாதி விடுவிக்கப்பட்ட அதேநேரம், வழக்கின் ஏழாவது பிரதிவாதி இறந்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விசாரணையின் போது 12 ஆவது பிரதிவாதி வெளிநாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது.

Leave a comment

Type and hit enter