OOSAI RADIO

Post

Share this post

அந்த மாதிரி நடிச்சது ஒரு குத்தமா?

இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என அந்த சீரியல் நடிகை கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு அவர் இப்போது அப்செட்டில் இருக்கிறாராம்.
போற போக்க பார்த்தா தனக்கு இருந்த ஹோம்லி இமேஜ் முற்றிலும் மறைந்து கவர்ச்சி நாயகி என்ற பெயர் வந்து விடுமோ என அவர் பயத்தில் இருக்கிறாராம்.


அப்படி என்னதான் நடந்தது என விசாரித்ததில் ஒரு விஷயம் கிடைத்திருக்கிறது. அதாவது நடிகை சமீபத்தில் நடித்திருந்த படத்தில் எல்லை மீறி பெர்பார்ம் பண்ணி இருந்தார்.

கேட்டால் போல்டான கேரக்டர் என கூறினார். ஆனால் அதிக சம்பளம் என்பதுதான் முக்கிய காரணம். இதை வைத்து நல்ல நல்ல கதாபாத்திரங்களை பிடிக்கலாம் என்பதும் நடிகையின் பிளான்.


ஆனால் இப்போது பார்த்தால் அந்த மாதிரியான வாய்ப்புகளை வைத்துக்கொண்டு தயாரிப்பாளர்கள் அணுகுகிறார்களாம். இதனால் நடிகை ரொம்பவும் அப்செட்.
இந்த கேரக்டர்களை ஏற்கலாமா அல்லது காத்திருக்கலாமா என்ற ஆலோசனையிலும் அவர் இருக்கிறாராம். ஆக மொத்தம் நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு.

Leave a comment

Type and hit enter