OOSAI RADIO

Post

Share this post

அட இங்க தான் இருக்கா கைலாசா!

நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை ஐந்து வருடங்களுக்கு பிறகு தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு தலைமறைவானார் நித்தியானந்தா.


ஆரம்பத்தில் தவறான வீடியோக்களால் தான் நித்யானந்தா என்று ஒருத்தர் இருக்கிறார் என்பதை பலருக்கும் தெரிய ஆரம்பித்தது.

அதன் பின்னர் இவருடைய சொற்பொழிவுகளுக்கு பலரும் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள்.
அதீத குற்றச்சாட்டுகள் தன் மீது விழுந்த காரணத்தால் திடீரென ஆசிரமத்தை காலி செய்து விட்டு இந்தியாவை விட்டு தலைமறைவானார்.


இந்த நிலையில் திடீரென தான் ஒரு நாட்டையே உருவாக்கி இருப்பதாக அறிவித்தார். அந்த நாட்டிற்கு தனியாக வலைப்பகுதி எல்லாம் இருக்கிறது.

அதில் போய் நீங்கள் குடியுரிமை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். நித்தியானந்தாவிடம் இருக்கும் சிஷ்யகைகளுக்காகவே கைலாசா போகலாம் என அப்போது பெரிய அளவில் கிண்டலாக பேசப்பட்டது.


ஒரு சிலர் நிஜமாகவே அந்த வலைதளப் பகுதியில் போய் சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்தார்கள்.


இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் நித்தியானந்தாவின் ஆசிரமங்களை தர்கார் பொறுப்பில் விடுவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது.


இதற்கு மறுப்பு தெரிவித்து நித்தியானந்தா மனு அனுப்பியிருந்தார். அப்போதுதான் தமிழக அரசு நித்தியானந்தா இந்தியாவிலேயே இல்லை என்று தெரிவித்திருக்கிறது.


மேலும் அவர் தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. நித்தியானந்தா இந்தியாவிலேயே இல்லாததால் அவருடைய மனுவை கோர்ட் தள்ளுபடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter