Post

Share this post

‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தள புகைப்படங்கள்! (Photos & Video)

நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லீக்காகி வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் இந்தப் படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, நடிகர் ஜெய் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜெயிலர் படப்பிடிப்பு தற்போது கடலூரில் நடைபெற்றுவருகிறது. இதனையடுத்து ரஜினிகாந்த்தை காண அவரது ரசிகர்கள் குவிந்துள்ளனர். இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் அவரது உதவியாளர்கள் குடை பிடித்தபடி இருக்க சேரில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும் அவர் நடைபயிற்சி செய்யும் விடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றன.

Leave a comment