போட்டி போட்டு ட்ரெண்ட் செய்யும் மத்திய மாநில ஆளும் கட்சிகள்..

கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
அதுவும் நேற்று கெட் அவுட் மோடி என்ற ஹாஷ் டேக் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்தது. திமுக கட்சியினருக்கு போட்டியாக அண்ணாமலை கெட் அவுட் ஸ்டாலின் என ட்ரெண்ட் செய்வதாக கூறியிருந்தார். அதை தொடர்ந்து இன்று காலையிலேயே இந்த ஹாஷ் டேக் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. இதனால் அரசியல் வட்டாரத்தில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. அதேபோல் சோசியல் மீடியாவும் பரபரப்பாக மாறியது.
இந்த சூழலில் பந்தயத்துக்கு நாங்க வரலாமா என தமிழக வெற்றி கழகத்தினரும் போட்டியில் குதித்துள்ளனர். அதன்படி TVK For TN என்ற ஹாஷ் டேக் இப்போது இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. இதை பார்க்கும் போது குறுக்க இந்த கவுசிக் வந்தா மொமெண்ட் தான் நினைவில் வந்து செல்கிறது. மேலும் அக்கட்சியினர் தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். நாங்க வந்தா சும்மா அனல் தெறிக்கும் தமிழ்நாட்டை காக்க வந்த ஜனநாயகனே என பதிவுகளை போட்டு அலப்பறை செய்து வருகின்றனர்.