OOSAI RADIO

Post

Share this post

அப்டேட் கொடுத்து திக்கு முக்காட வைத்த இயக்குனர்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படம் பாராட்டுகளை பெற்று வருகிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இன்று இப்படம் வெளியாகி இருக்கிறது.
படத்தை பார்த்த அனைவருமே பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அதேபோல் தியேட்டரில் ரசிகர்களுடன் படத்தை பார்த்த டீம் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போயிருக்கின்றனர்.
அந்த அளவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. படம் பார்த்த பிறகு பிரதீப் மற்றும் அஸ்வத் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதில் இயக்குனர் ஒரு பரபரப்பான அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது இந்த அப்டேட் தயாரிப்பாளருக்கும் பிரதீப்புக்கும் கூட தெரியாது என்ன பீடிகை போட்டார்.
அதை அடுத்து ஏஜிஎஸ் அஸ்வத் பிரதீப் கூட்டணி இன்னும் மூன்று வருடத்தில் மீண்டும் இணையும் என தெரிவித்துள்ளார். அதன்படி 2027ம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் படம் வெளியாகலாம்.

அதை அடுத்து பிரஸ் மீட்டுக்கு வந்த தயாரிப்பாளர் அர்ச்சனா அதை உறுதிப்படுத்தினார். மேலும் பிரதீப் சார் டேட் கொடுங்க என விளையாட்டாக கூறினார்.
இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் அதை சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் படம் நிச்சயம் 100 கோடியை தாண்டி வசூலிக்கும் என வாழ்த்துக்களையும் பறக்க விடுகின்றனர்.

Leave a comment

Type and hit enter