மாஸ் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி

பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் எல்லாமே பரபரப்பாக தான் இருக்கும். படத்தில் நடிக்கும் முக்கிய கேரக்டர்களின் பிறந்த நாளுக்கு கூட அப்டேட் விடுவார்கள். ஆனால் விஜய் சேதுபதி சத்தமே இல்லாமல் ஒரு படத்தின் படப்பிடிப்பையே முடித்து இருக்கிறார்.
விஜய் சேதுபதி கைவசம் ஏஸ் மற்றும் ட்ரெயின் என்ற இரண்டு படங்கள்தான் இருக்கின்றன என்ற அப்டேட் தான் இதுவரை நமக்குத் தெரியும். ஆனால் அவர் இயக்குனர் பாண்டிராஜ் உடன் ஒரு படத்தில் இணைந்திருக்கிறார். அதில் அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்திருக்கிறார். செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ட்ரெய்லர் எல்லாம் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.