Post

Share this post

உலகக் கிண்ண மோதல் இன்று தொடக்கம்!

ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் சௌத் கீலாங்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. குரூப் ஏ பிரிவு முதல் ஆட்டத்தில் இலங்கை – நமீபிய அணிகள் மோதுகின்றன.
கிரிக்கெட்டில் குறுகிய காலத்தில் அதிக வரவேற்பைப் பெற்ற ஆட்டமுறையாக டி20 உள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் டி20 உலகக் கிண்ணத்தில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த 2021 இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது ஆஸி.
16 அணிகள் பங்கேற்பு:
இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் 16 ஆம் திகதி முதல் நவ. 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள போட்டியில் 16 அணிகள் கலந்து கொள்கின்றன.
தொடக்க ஆட்டம் : குரூப் ஏ பிரிவின் முதல் ஆட்டத்தில் இலங்கை – நமீபிய அணிகள் மோதுகின்றன. இப்பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சூப்பா் 12 சுற்றுக்கு முன்னேறும்.
இச்சுற்றில் நமீபியா, நெதா்லாந்து, இலங்கை, யுஏஇ, அயா்லாந்து, ஸ்காட்லாந்து, மே.இந்திய தீவுகள், சிம்பாப்வே உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன.
22 இல் சூப்பா் 12 சுற்று:
அக். 22 இல் தொடங்கவுள்ள சூப்பா் 12 சுற்று முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸி.-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.
23 இல் இந்தியா – பாக். மோதல்: அதற்கு அடுத்த நாளான 23 ஆம் திகதி பரம வைரி அணிகளான இந்தியா – பாக். அணிகள் மோதுகின்றன.
ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக சூப்பா் 12 பிரிவில் இடம் பெற்றுள்ளன.
சாம்பியனுக்கு ரூ.13 கோடி பரிசுத் தொகை:
டி20 உலகக் கிண்ண போட்டியில் சாம்பியன் அணிக்கு ரூ.13.9 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. ரன்னா் அப் அணிக்கு ரூ.6 .6 கோடியும், அரையிறுதிக்கு தகுதி பெறும் 2 அணிகளுக்கு தலா ரூ.3.3 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
அவுஸ்திரேலேயாவில் மொத்தம் 7 நகரங்களில் நடைபெறும் இப்போட்டியில் 45 ஆட்டங்கள் இடம் பெறுகின்றன.

Recent Posts

Leave a comment