OOSAI RADIO

Post

Share this post

அந்த ஹீரோவால என் நிம்மதியே போச்சு டென்ஷனில் புலம்பும் நடிகை

மாடலிங் மூலம் பெரிய திரைக்கு வந்த அந்த நடிகை முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திரும்பினார். அதைத்தொடர்ந்து நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து அவர் நடித்து வருகிறார். ஆனால் முதல் படத்தில் நடிக்கும் போதே அந்த ஹீரோவுடன் இவருக்கு நெருக்கம் இருப்பதாக செய்திகள் கிளம்பியது.இரு தரப்பும் இந்த விஷயத்தில் அமைதியாக தான் இருந்தனர். ஆனால் தற்போது நடிகை அந்த நடிகரால் தன் நிம்மதியே போச்சு என புலம்பி வருகிறாராம்.

அதற்கு காரணம் நடிகர் சமீபத்தில் தன் மனைவியை பிரிவதாக அறிவித்தார். உடனே ஒன்றும் ஒன்றும் இரண்டு என அந்த நடிகையை காரணம் காட்டி கிசுகிசுக்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதனால் நடிகை வெளியில் தலை காட்ட முடியல. அவங்க பிரச்சினையில் என்னை ஏன் இழுத்து விடுறாங்க என நெருக்கமானவர்களிடம் டென்ஷனில் புலம்பி கொண்டிருக்கிறாராம். நடிகர் கூட இதை ஒரு பேட்டியில் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என வெளிப்படையாக கூறி முற்றுப்புள்ளி வைத்தார். ஆனாலும் இந்த விவகாரம் இன்னும் பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கிறது.

Leave a comment

Type and hit enter