இளையராஜா மீது இவ்வளவு பாசமா?

சுப்ரமணியபுரம் படத்தில் சிறு பொன்மணி அசையும் என்ற பாடல் வரும், அந்தப் பாடல் மட்டும் அல்லாது படம் முழுவதுமே இளையராஜாவின் 80ஸ் பாடல்களை மட்டும் தான் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாராம் சசிக்குமார்.
தோட்டம் கொண்ட ராசாவே, அந்த மாரியம்மன் கோவில் திருவிழா பாடலான மதுர குலுங்க குலுங்க பாடலுக்கு, ஒரு இளையராஜாவின் மாரி அம்மன் பாடல், காதல் சிலுவையில் அறைந்தால் என்னை அந்த பாடல் வரும் சூழலில்,இதயம் போகுதே என்ற பாடலை வைத்திருந்தாராம் ஜேம்ஸ் தான் எனக்கு பாடல் தந்தே ஆக வேண்டும் என்பதில் குறியாக இருந்து பாடல்களை வாங்கி விட்டாராம். இல்லையென்றால் அந்த இதயம் போகுதே பாடலை நிறைய இடங்களில் சசிகுமார் வைத்திருந்தாராம்.
மேலும் இளையராஜாவை மிகவும் பிடிக்கும் என்றாலும் அவரைப் பார்த்தது இல்லையாம். முதன் முதலில் தலைமுறை படத்தின் தயாரிப்பாளராக ஆன சசிகுமார், பாலுமகேந்திராவுடன் இளையராஜாவை பார்க்க அங்கு சென்றபோது பரவசமாக இருந்ததாம், பாலுமகேந்திரா தன் கையைப் பிடித்து அவரை அழைத்து சென்றது எவ்வளவு பெரிய ஆளுமை திரையில் பார்த்து ரசித்திருக்கிறோம் நம் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறாரே என மிகவும் சந்தோஷமாக இருந்ததாம் சசிக்குமாருக்கு.
தலைமுறை படத்தில் நிறைய அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாம், வெளியே கடன் கேட்டு பைனான்ஸ் காரர்கள் அதிகப்படியாக நிற்பார்களாம்.இருப்பினும் இளையராஜா பாலு மகேந்திரா போன்ற பெரிய ஆளுமையுடன் பணிபுரிந்ததால், அவருக்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லையாம், இன்னும் கடன் வாங்கி கூட எடுக்கலாம் என மனது நினைத்ததாம்இளையராஜாவும் பாலு மகேந்திரா மீது உள்ள நட்பால் தலைமுறை படத்திற்கு பணமே வாங்க வில்லையாம் வாசிப்பவர்களுக்கு மட்டும் பணம் கொடுங்க போதும் என்று சொல்லிவிட்டாராம் இதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் சசிக்குமார்.