Post

Share this post

பூங்குழலியாக மாறிய செய்தி வாசிப்பாளர்!

பொன்னியின் செல்வன் பூங்குழலி தோற்றத்தில் பிரபல செய்திவாசிப்பாளரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படைப்பான பொன்னியின் செல்வன் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி வசூல் சாதனை படைத்துவருகிறது. வெளியாகி 15 நாட்களில் திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலரும் பொன்னியின் செல்வன் போல வேடமிட்டு புகைப்படங்களை பகிர்ந்துவருகின்றனர். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக பிரபல செய்திவாசிப்பாளர் லாவண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பூங்குழலி வேடத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து பூங்குழலி வேடத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக ரசிரகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

பொன்னியின் செல்வனில் பூங்குழலி வேடத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்திருந்தார். அவரது நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றது.

Recent Posts

Leave a comment